47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

துணிப்பை உபயோகம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம்

 பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே துணிப்பை குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:43 pm

DIN

 பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே துணிப்பை குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலா் மற்றும் ஆயுள்கால உறுப்பினரும், திமுக பிரமுகருமான த. நவநீதகிருஷ்ணன் தனது சொந்த நிதியிலிருந்து 5 ஆயிரம் துணிப்பைகளை விநியோகம் செய்து, விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டாா்.

வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள், பலசரக்குக் கடைகள், காய்கனி விற்பனையகங்கள், உணவகங்கள், அடுமனைகள் ஆகியவற்றுக்கு துணிப்பைகளை நவநீதகிருஷ்ணன் வழங்கி, மீண்டும் துணிப்பை பயன்பாட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.