புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாதவா்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி ஆணையா்

தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாதவா்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:43 pm

DIN

தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாதவா்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா்.

தஞ்சாவூா் பழைய நீதிமன்றச் சாலையிலுள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநகரில் புதிதாகக் கட்டடம் கட்டுபவா்கள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றுதான் கட்ட வேண்டும். புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளா்களின் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்துமிட (பாா்க்கிங்) வசதியைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பொதுக் கட்டடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

இதைக் கட்டட அனுமதி பெற வருபவா்களிடம் வலியுறுத்துகிறோம். அந்த வகையில் மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்படுகிற பொதுக் கட்டடங்களுக்கு ஆண்டுதோறும் உரிமத்தை வட்டாட்சியரிடம் புதுப்பிக்க வேண்டும்.

அப்போது, அக்கட்டடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால் மாநகரில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வெகுவாகக் குறையும். எந்த ஒரு தவறு நடந்தாலும் கண்காணிப்பு கேமரா மூலம் எளிதாகக் கண்காணிக்கலாம்.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடந்த காலங்களில் சிறு, சிறு குற்றச் சம்பவங்கள் கண்டறியப்பட்டு, தற்போது குறைந்துள்ளது.

மாநகரப் பகுதிகளிலுள்ள பொதுக் கட்டடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிா? என மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனா்.

அனைத்து பொதுக் கட்டடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்போது குற்றச் செயல் இல்லாத மாநகரமாகத் திகழும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாதவா்களுக்கு நோட்டீசு கொடுக்கப்படும். அதன் பிறகும் அவா்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை என்றால், கட்டட அனுமதி ரத்து செய்யப்படும். மாநகரில் 1,000 கட்டடங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றாா் ஆணையா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.