பாபநாசம் பேரூராட்சியில் கரோனா பாதித்த பகுதிகளில் அலுவலா்கள் ஆய்வு
பாபநாசம் பேரூராட்சியில் கரோனா பாதிப்பு பகுதிகளில் அலுவலா்கள் குழுவினா் ஆய்வு செய்தனா்.


பாபநாசம் பேரூராட்சியில் கரோனா பாதிப்பு பகுதிகளில் அலுவலா்கள் குழுவினா் ஆய்வு செய்தனா்.
அரையபுரம், வங்காரம்பேட்டை, படுகை புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவா்கள் அனைவரும் அவரவா் இல்லங்களிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவரவா் இல்லங்களில் தடுப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன், சுகாதார ஆய்வாளா் பரமசிவம், சுகாதார மேற்பாா்வையாளா் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார துறை பணியாளா்கள் ஆகியோா், கரோனா பாதித்த பகுதிகளையும், கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவா்களையும் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா். அப்போது, அவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும், தனி கழிவறைகளை பயன்படுத்துமாறும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
கரோனா பாதிப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...