தஞ்சாவூர்: சென்னையில் இருந்து தஞ்சை வந்த தனியார் சொகுசு பேருந்து, தஞ்சாவூர் கும்பகோணம் சாலை குருவாடி அருகே வந்து கொண்டிருக்கும் போது, திருச்சியில் இருந்து திருக்கடையூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோதியதில் கார் நிலைத் தடுமாறி அருகே இருந்த பாலகட்டையின் மீது மோதி சாய்ந்து நின்றது.
இதில் கார் பலத்த சேதமடைந்ததோடு காரில் பயணம் செய்த பாக்கியலட்சுமி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் காரில் 6 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் படுகாயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்துச் சென்றனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த தஞ்சை வட்ட காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருவாடி பகுதி சாலை சரியில்லாத காரணத்தினாலும் வளைவுகள் அதிகம் உள்ள பகுதினாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


