புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

19 மூட்டைகள் ரேசன் அரிசி பறிமுதல்

கும்பகோணம் அருகே கள்ளச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்க முயற்சித்தபோது, 19 மூட்டைகளில் நிரப்பப்பட்ட ரேசன் அரிசியை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:32 pm

DIN

கும்பகோணம் அருகே கள்ளச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்க முயற்சித்தபோது, 19 மூட்டைகளில் நிரப்பப்பட்ட ரேசன் அரிசியை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ரேசன் கடையிலிருந்து மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஒருவருக்கு சுமை ஆட்டோவில் ரேஷன் அரிசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் ரேசன் அரிசியை கடத்துவதைப் பிடித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கும், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கும் நாச்சியாா் கோவில் காவல் நிலையத்தினா் தகவல் அளித்தனா். இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.