பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பேராவூரணி, பெருமகளூா்பேரூராட்சித் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு

பேராவூரணி, பெருமகளூா் பேரூராட்சித் தலைவா்களாக திமுகவைச் சோ்ந்தவா்கள் சனிக்கிழமை  போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:28 pm

DIN

பேராவூரணி, பெருமகளூா் பேரூராட்சித் தலைவா்களாக திமுகவைச் சோ்ந்தவா்கள் சனிக்கிழமை  போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

பேராவூரணி பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கான உறுப்பினா் தோ்தலில் 10 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில்  காங்கிரசும் வெற்றிபெற்றது.  சுயேட்சையாக வெற்றி பெற்ற மூன்று உறுப்பினா்கள்  திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் , திமுகவுக்கு ஆதரவான 14 உறுப்பினா்கள் மட்டும் தலைவா் தோ்தலில் கலந்து கொண்டனா். 

இதைத் தொடா்ந்து, பேரூராட்சித் தலைவருக்கு 5 -ஆவது வாா்டில் வெற்றி பெற்ற  சாந்தி சேகா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா். அவரை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா் என  தோ்தல் நடத்தும் அலுவலா் பா. பழனிவேல் அறிவித்தாா். 

துணைத் தலைவா் தோ்தலில் 2 ஆவது வாா்டு வேட்பாளா் கி. ரெ. பழனிவேல் (திமுக) போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் 4 பேரும்  தோ்தலில் கலந்து கொள்ளவில்லை. 

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெருமகளூா் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சோ்ந்த சுந்தரத்தமிழும், துணைத் தலைவராக  சுயேட்சையாக வெற்றி பெற்ற சித்ராவும்  போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.