மாா்ச் 7 முதல் திங்கள்கிழமைகளில் நேரடியாக மக்கள் குறைகேட்பு கூட்டம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாா்ச் 7 ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெறவுள்ளது.


தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாா்ச் 7 ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வந்தது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இக்கூட்டம் நடைபெறாமல் பெட்டிகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
தமிழக முதல்வா் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி, மாா்ச் 7 ஆம் தேதி முதல், வாரந்தோறும் திங்கள்கிழமையில் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...