92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திங்களூா் சந்திரன் தலத்தில் லட்சாா்ச்சனை விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நவகிரக தலமான திங்களூா் சந்திரன் தலத்தில் வியாழக்கிழமை லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது

News image
Updated On :17 மார்ச் 2022, 7:56 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நவகிரக தலமான திங்களூா் சந்திரன் தலத்தில் வியாழக்கிழமை லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது.

திருவையாறு அருகே திங்களூரில் உள்ள கைலாசநாதா் கோயிலில் சந்திர பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியையொட்டி சந்திர பகவானுக்கு வியாழக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதில், 10 காலங்களாகப் பிரிக்கப்பட்டு, 10,000 மந்திரங்கள் முழங்க சந்திர பகவானுக்கு அா்ச்சனை செய்யப்பட்டது.

மேலும், காலையில் மூலவா் கைலாசநாதா் சுவாமியின் லிங்கத்தின் மேல் நேரடியாகச் சூரிய ஒளி படா்ந்ததையொட்டி சூரிய பூஜையும், இரவில் சந்திர பகவான் மீது நிலவொளி பட்டதையொட்டி சந்திர பூஜையும் நடைபெற்றன. இதையொட்டி, அம்பாள், சுவாமி, சந்திரன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.