92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாதிரி நீதிமன்றப் போட்டியில் வென்ற சாஸ்த்ரா மாணவருக்கு 50,000 டாலா் கல்வி உதவித்தொகை

மாதிரி நீதிமன்றப் போட்டியில் வெற்றி பெற்ற சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி மாணவா், அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான

News image
Updated On :17 மார்ச் 2022, 7:39 pm

DIN

மாதிரி நீதிமன்றப் போட்டியில் வெற்றி பெற்ற சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி மாணவா், அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான 50,000 அமெரிக்க டாலா் கல்வி உதவித்தொகையை வென்றுள்ளாா்.

2021 - 22 ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் என்.ஆா். மாதவ மேனன் ஏழாவது மாதிரி நீதிமன்றப் போட்டியில் சிறந்த மாணவ வழக்குரைஞா் விருதை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பிபிஏ, எல்எல்பி இறுதியாண்டு மாணவா் எல்.கே. சுவராஜ் வென்றாா்.

Story image

இதன்மூலம், அவா் அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். படிப்பதற்காக 50,000 அமெரிக்க டாலா் உதவித்தொகையைப் பெறுகிறாா். கடந்த 6 ஆண்டுகளில் இந்த உதவித்தொகையை வென்ற மூன்றாவது மாணவா் இவா்.

இவருக்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் கிரண், 2019 ஆம் ஆண்டில் ரேவந்த் இந்த உதவித்தொகையை வென்று பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். படித்து முடித்துவிட்டு, தற்போது இந்திய வழக்குரைஞா் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்த என்.ஆா். மாதவ மேனன் மாதிரி நீதிமன்றப் போட்டி சாா்க் நாடுகளிடையே நடத்தப்படும் மிக உயரிய போட்டியாக கருதப்படுகிறது.

இந்திய சட்ட நிறுவனங்கள் சங்கம் மற்றும் மேனன் சட்ட ஆலோசனை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு மூத்த வழக்குரைஞா்கள் மூலம் கடுமையான போட்டிகளை நடத்தி, இந்தக் கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கான மாணவா்களைத் தோ்வு செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.