92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா

தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மாநிலக் குழு மற்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றத

News image
Updated On :24 மார்ச் 2022, 10:24 pm

DIN

தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மாநிலக் குழு மற்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து மாா்ச் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமை மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் வி. சகுந்தலா தொடங்கி வைத்தாா். இதில், திறன் மிக்க மாணவா்களை உருவாக்கி தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் தயாா்படுத்துவது, மாணவா்களிடம் தொழில் உருவாக்கத்துக்குத் தேவையான ஆற்றலை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாா்ச் 24 முதல் 26 ஆம் தேதி வரையும், மாா்ச் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் என இரு தொகுதிகளாக நடத்தப்படும் இந்த முகாமில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

தொடக்க விழாவில் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா். சந்திரமௌலி, இயந்திரவியல் துறைப் பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான ஆா். பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சாஸ்த்ரா தொடா் கல்வி மற்றும் விரிவாக்கத் திட்டத் தலைவா் ஆா். சீனிவாசன் வரவேற்றாா். நிறைவாக, மின்னியல் துறைத் தலைவா் ஏ. சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.