கும்பகோணம் மருத்துவமனையில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு
கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மா்மமான முறையில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்து கிடந்தாா்.


கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மா்மமான முறையில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்து கிடந்தாா்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூா் பகுதி குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (23). கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருத்திகா (20) பிரசவத்துக்காக கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவருக்கு மே 3 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த மாரிமுத்து புதன்கிழமை இரவு கழிப்பறைக்குச் செல்லும் பாதையில் தலையில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மாரிமுத்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, இச்சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...