தஞ்சாவூர் சர்க்கரை ஆலை மூடல்: விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சாலை மறியல்

 தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள
தஞ்சாவூர் சர்க்கரை ஆலை மூடல்: விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சாலை மறியல்

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளிடம் கரும்பு பயிர் பதிவு செய்து, அரவை பணியை செய்து வருகிறது. 

வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆலையில் அரவை பணி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு காலதாமதமாக டிசம்பர் இறுதியில் அரவை பணி தொடங்கி கடந்த 27ஆம் தேதி மூடுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட கரும்புகள் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் கரும்பு வெட்டப்படாததால் விவசாயிகள் அரவை பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்பும் வெட்டப்படவில்லை. இந்நிலையில் ஆலை 30-ம் தேதி அரவை பணியை நிறுத்தியது. 

ஆனால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அனைத்து கரும்பையும் வெட்டும் வரை ஆலை இயங்கும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து இருந்தும், கரும்பை வெட்டாமல் அரவை பணியை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்த கரும்பு விவசாயிகள் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாடு புதூர் பகுதியில் கரும்பு ஏற்றிய லாரியை சாலையின் குறுக்காக நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  சர்க்கரையாக இனிக்க வேண்டிய கரும்பே விவசாயிகளுக்கு கசப்பாக மாறி உள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். 10 மாதங்களில் வெட்டவேண்டிய கரும்பு 15 மாதங்கள் ஆனாலும் வெட்டப்படவில்லை. இந்நிலையில் ஆலை மூடப்பட்டதால் ஒன்றரை ஆண்டுகளாக பயிர் செய்தது வீண் ஆகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com