மகா சிவராத்திரி: பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. 
பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள்.
பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. 

இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு பெருவுடையாருக்கு 10 மணி, 12 மணி, 2 மணி, 4 மணி, ஆறு மணி என ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன.

இதில் பெருவுடையார்க்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்படி உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ப்ரியன் நாட்டியாஞ்சலி சார்பில் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி இரவு முழுவதும் செலுத்தினர்.

இதே போல் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக தஞ்சை திலகத்திடரில் தப்பாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வர கச்சேரிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு பெரிய கோயிலில் சுமார் 2000 பக்தர்கள் குவிந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com