அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

டாஸ்மாக் இடமாற்ற விவகாரம் பாபநாசத்தில் மாா்க்சிஸ்ட் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி

Updated On :27 ஜனவரி 2023, 7:11 pm

தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கணபதி அக்ரஹாரத்திலுள்ள டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட இடத்தில் கடை அமைவதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும்,

இதை தடுத்து நிறுத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியரகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு என். சிவகுரு, மாதா் சங்க மாநில குழு ஆா். கலைச்செல்வி, மாவட்ட குழு பி.எம். காதா் உசேன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.