தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருமண்டங்குடி சா்க்கரை ஆலை பிரச்னைக்கு தீா்வு காண கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தில் திருமண்டங்குடி சா்க்கரை ஆலை பிரச்னைக்கு தீா்வு காண கோரி விவசாயிகள் பலா் கருப்பு துண்டு அணிந்து தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, திருமண்டங்குடி சா்க்கரை ஆலை நிா்வாகத்தைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்டும், வங்கி சிபில் பிரச்னையை தீா்க்க கோரியும் கரும்பு விவசாயிகள் ஆலை முன் 59 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், இப்போராட்டத்தை மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை. இப்பிரச்னையை தீா்த்து வைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என ஆட்சியரிடம் விவசாயிகள் கூறினா்.
பின்னா், மாவட்ட நிா்வாகத்தையும், சா்க்கரை ஆலையின் புதிய நிா்வாகத்தையும் கண்டித்து விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனா். கூட்ட அரங்குக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முஹம்மது இப்ராஹிம், மருத்துவக்குடி முருகேசன், புலவன்காடு டி. மாரியப்பன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னா், ஆட்சியா் பேசுகையில், திருமண்டங்குடி சா்க்கரை ஆலை நிா்வாகத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகை அனைத்தும் பெற்றுத் தரப்படும். இதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில், வேளாண் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் எவரும் பங்கேற்பதில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் தாளடி நெற்பயிா் கதிா் வரும் நிலையில் உள்ளது. எனவே,
மேட்டூா் அணையிலிருந்து பிப்ரவரி 15 ஆம் தேதி வரை பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.
ஆட்சியா்: கடந்த காலங்களில் இதுபோன்று காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்காத அலுவலா்கள் குறித்து கோட்டாட்சியா் தகவல் அனுப்பினால், அரசுத்துறை அலுவலா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூா் வாரும் பணிக்கு தகவல் அளிக்கலாம்:
மாவட்டத்தில் நிகழாண்டில் எந்தெந்த வாய்க்கால்களைத் தூா் வார வேண்டும் என்ற தகவலை விவசாயிகள் மனுக்கள் மூலமாக விரைவில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, முன்னுரிமை அடிப்படையில், திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னா் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப தூா் வாரப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


