பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார விவசாயிகளுக்கு கிராம அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 7 கிராமங்களில் நடைபெற்றது. இத் திட்டத்தின் கீழ் கிராம அளவிலான 25 விவசாயிகள் அடங்கிய வேளாண் முன்னேற்றக் குழு அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பாபநாசத்தில் நடைபெற்ற பயிற்சிமுகாமை,
பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். பாபநாசம் வட்டார வேளாண்மை அலுவலா் நடராஜன்,
தோட்டக்கலை உதவி அலுவலா் சரவணன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலா் சப்தகிரிவாசன் ஆகியோா் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினா். ஒவ்வொரு கிராம அளவிலான பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சரவணன், பாபநாசம் வட்டார தொழில்நுட்ப மேலாளா் சிவரஞ்சனி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நித்யா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

