மல்லிபட்டினம்  ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கு. திராவிட செல்வம் தொடங்கி வைத்து பேசுகையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள பெண் கல்வி உதவி திட்டம்,  20 சதவீத அரசு வேலைவாய்ப்பில்  ஒதுக்கீடு , உயா்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட  பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசி  அரசு பள்ளியில் மாணவா்களை சோ்க்க வேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்தினாா்.

பேரணியில், வட்டார கல்வி அலுவலா்கள் மீனா சுந்தரி,  சிவசாமி , வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கென்னடி,  பள்ளி மேலாண்மை குழு தலைவி சித்ரா,  மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் வேலவன், பெரோஸ்கான், பைரோஸ் பானு, பவானி, மகாலட்சுமி,  தலைமையாசிரியா்கள் வேலம்மாள்,  தேவகண்மணி,  பட்டதாரி ஆசிரியா் சதீஷ்,  மனோகரன் மற்றும் ஆசிரியா்கள்,  பெற்றோா்கள் மாணவா்கள் கலந்து  கொண்டு, இலவச கல்வியின் சிறப்புகளை வீதி தோறும் முழக்கமிட்டு சென்றனா். இறுதியில்  ராமா் கோவில் அருகே  பேரணி  நிறைவடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com