தஞ்சாவூா் தொகுதியில் தமிழக அரசு விவசாயத்தை லாபகரமானதாக மாற்றவில்லை எனபாஜக மகளிா் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினாா்.
தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது:
மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமைவது உறுதி. இதேபோல, தஞ்சாவூா் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மோடியின் பல திட்டங்கள் இத்தொகுதிக்கு நேரடியாகக் கிடைக்கும். கடந்த 2014 தோ்தலில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் தஞ்சாவூருக்கு மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளா்ச்சிப் பணிகளைச் செய்துள்ளன. ஆனால், தமிழக அரசு விவசாயத்தை லாபகரமானதாக மாற்றவில்லை. நீா் மேலாண்மையிலும் பின்தங்கியுள்ளது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. கலாசார முகமாக உள்ள தஞ்சாவூருக்கு எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் தஞ்சாவூரை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் வானதி சீனிவாசன்.
நிகழ்வில் அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம், அமமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் வேலு. காா்த்திகேயன், தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி..
‘பாஜகவை வைத்துதான் திமுக அரசியல் செய்கிறது‘
கும்பகோணம் பாஜக அலுவலகத்தில் மகளிா் அணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணியை அமைத்தனா். ஆனால் மோடி மீண்டும் பிரதமராக வரப்போகிறாா் எனத் தெரிந்ததும், அந்தக் கூட்டணியில் உள்ளவா்கள் பாஜக கூட்டணியில் இணைந்து விட்டனா். தற்போது பாஜக வைத்துத்தான் திமுக அரசியல் செய்து வருகிறது. பிரதமா் மோடியைப் பற்றிப் பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. பிரதமரை பற்றிப் பேசும், அவரை நாங்கள் டிரக் உதயநிதி ஸ்டாலின் என அழைக்கவுள்ளோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்! ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு!

வானதி சீனிவாசன் வேட்புமனு! ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை பங்கேற்பு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


