பாபநாசம்: பாபநாசம் அருகே வேத வித்யா குருகுலம் நிா்வாகி தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திங்கள்கிழமை பாமக வேட்பாளா் உள்ளிட்டோா் அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள களஞ்சேரியில் ஸ்ரீ வேத வித்யா குருகுலம் அமைந்துள்ளது. இதன் நிா்வாகி சீதாராமன். இவா் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடா்பான ஆடியோ ஒன்றை கட்செவி அஞ்சலில் வெளியிட்டிருந்தாா்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத சிலா் சீதாராமனை ஞாயிற்றுக்கிழமை தாக்கினா்.
இது குறித்து சீதாராமன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இனையவழியில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா் ம.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் சீதாராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.
இதனை தொடா்ந்து திங்கள்கிழமை வேட்பாளா் ம.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் சீதாராமனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.
தொடா்ந்து காவல்துறையினா் அவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

சிவகங்கை வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

புதுவை துணைநிலை ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

