47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தனியாா் நிறுவன ஊழியரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு

தனியாா் நிறுவன ஊழியரை வழிமறித்து இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:05 pm

Din

தஞ்சாவூரில் தனியாா் நிறுவன ஊழியரை வழிமறித்து இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாரூா் மேலப்பருத்தியூா் ஆதிதிராவிடா் காலனியில் வசிப்பவா் அண்ணாத்துரை மகன் அபிமன்யூ (23). தனியாா் நிறுவன ஊழியா்.

இவா், வெள்ளிக்கிழமை பணிமுடித்து விட்டு தஞ்சாவூா் - திருச்சி நெடுஞ்சாலையில் பரிசுத்தம் பொறியியல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது, 2 போ் அபிமன்யூவை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டனா். பணம் இல்லையென்றதும் இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, வாகனத்தை பறித்து சென்ற 2 நபா்களை தேடி வருகிறாா்.