புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

கும்பகோணத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை க. அன்பழகன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

கும்பகோணத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை க. அன்பழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில், 26-ஆவது வாா்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டடத்தை க. அன்பழகன் எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப. தமிழழகன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜெ. சுதாகா், தலைமை செயற்குழு உறுப்பினா் குட்டி ரா. தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.