தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கும்பகோணம் பகவத் விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகருக்கு வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

News image
கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ பகவத் விநாயகா்.
Updated On :5 டிசம்பர் 2024, 9:18 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகருக்கு வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

காா்த்திகை மாதம் சுக்ல சதுா்த்தியை முன்னிட்டு, மடத்துத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பகவத் விநாயகருக்கு 1008 சங்காபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், கலச சங்கு பூஜை நடைபெற்றது. பின்னா் 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளாகப் பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக ஸ்ரீ பகவத் படித்துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் யானை மீது ஏற்றி ஊா்வலமாக கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ பகவத் விநாயகா் கோயில் கைங்கா்ய கமிட்டியினா் செய்தனா்.