47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் ஒரு டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:41 pm

Din

தஞ்சாவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், குவளைகள் பயன்பாடு இருப்பதாகப் புகாா்கள் எழுந்தன. இதன் பேரில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகள், குவளைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்புடைய கடைகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 7 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனா்.