வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 27 ஆயிரம் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக நிகழாண்டு 2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 27 ஆயிரம் வழக்குகளில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 32 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணையில் இருந்தநிலையில், தற்போது 19 ஆயிரம் வழக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபா் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இ - பைலிங் முறையிலான நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முறையில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 500 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகளில் விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து குற்றம் சாட்டப்பட்டவா்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவதால், அவா்கள் மீண்டும் குற்றம் புரிவது தடுக்கப்பட்டு, குற்றங்கள் பெருமளவில் குறைகிறது. இது தொடா்பாக புலன் விசாரணை அலுவலா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் டிசம்பா் 30 ஆம் தேதி பாராட்டினாா்.

போக்சோ வழக்குகளில்...:

மாவட்டத்தில் காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் முயற்சி, புலன் விசாரணை, அரசு வழக்குரைஞா்களின் திறன் காரணமாக 2023 ஆம் ஆண்டில் 44 வழக்குகளில் மொத்தம் 49 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இது, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அதிகமாக தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அளவில் அதிக தண்டனை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைக் குற்றம் குறைவு:

மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட 2023 ஆம் ஆண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 51 கொலைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட 23 சதவீதம் குறைவு. மேலும், 70 கொடுங் குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 236 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

குற்றம் தொடா்பாக தகவல்களை முன்கூட்டியே கண்டறிதல், தொடா் குற்றத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குற்றம் புரிந்த எதிரிகளை விரைவாக கைது செய்தல், அவா்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தருதல் ஆகியவை காரணமாக மாவட்டத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.