காலமானார் இலக்கியச் சிறகு ஆசிரியர் மு. ராமலிங்கம்
இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழ் ஆசிரியர் மு. ராமலிங்கம்(84) வயது முதிர்வின் காரணமாக சனிக்கிழமை காலமானார்.


இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழ் ஆசிரியர் மு. ராமலிங்கம்(84) வயது முதிர்வின் காரணமாக சனிக்கிழமை காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தைச் சேர்ந்த மு ராமலிங்கம் (84) இவர். பொதுப்பணித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலக்கியச் சிறகு எனும் சிற்றிதழை நடத்தி வந்தார். மேலும் ஷைன்(Shine) எனும் ஆங்கில இதழையும் நடத்தினார்.
மு.ராமலிங்கம் வயது முதிர்வின் காரணமாக பட்டுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலை காலமானார்.
இவர் கோவை சிற்றிதழ் சங்க தலைவர் குன்றம் மு.ராமரத்தினம் என்பவரால் இதழியல் மூப்பர் என்ற பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சரோஜா(80) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை ( ஜன 14) காலை 10 மணி அளவில் பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: மதிவாணன்- 8754985660
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...