தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் காளையை விடுபவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த வி. பவுன்ராஜ் (49) சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அருகே வந்த மற்றொரு காளை மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பவுன்ராஜ் திங்கள்கிழமை அதிகாலை பலியானார்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.