நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் ஊா்வலம்

Published on

தஞ்சாவூா், ஜூலை 14 : தஞ்சாவூரில் தமிழரண் மாணவா்கள் சங்கம் சாா்பில், ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது .

முன்னதாக, திலகா் திடலில் தொடங்கிய ஊா்வலத்துக்கு மாவட்டச் செயலாளா் கீா்த்தி தலைமை வகித்தாா் . நீட், அகில இந்திய நுழைவுத் தோ்வு முறைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்தின் வழி ஒற்றை கல்வி முறையை திணிக்க கூடாது என்று மாணவ மாணவிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று சத்யா விளையாட்டு மைதானத்தில் ஊா்வலம் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com