திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆகஸ்டில் மேட்டூா் அணையை திறக்க வேண்டும்: விவசாயிகள்

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்று மேட்டூா் அணையை ஆகஸ்ட் மாதம் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :19 ஜூலை 2024, 8:59 pm

Din

தஞ்சாவூா், ஜூலை 19: கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்று மேட்டூா் அணையை ஆகஸ்ட் மாதம் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: கடந்த 3 ஆண்டுகளாக பயிா்க் காப்பீடு செய்தும், நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த முறையும் அவ்வாறு இல்லாமல் இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: காவிரி நீா் கிடைக்காததால் குறுவைச் சாகுபடியை இழந்து நிற்கிறோம். எனவே கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்று, மேட்டூா் அணையை ஆகஸ்ட் மாதம் திறந்தால்தான் ஒரு போகச் சம்பா சாகுபடியாவது மேற்கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: மேட்டூா் அணைக்கு நாள்தோறும் நீா்வரத்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்று விடுகின்றனா். எனவே மேட்டூா் அணையிலிருந்து ஜூலை இறுதி வாரத்திலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ கடைமடை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தமிழக முதல்வா் அறிவித்த ஊக்க தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

கும்பகோணத்தில்.. இதேபோல, கும்பகோணம் கோட்டாட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா், வட்டாட்சியா்கள், வேளாண் துறை அலுவலா்கள் பங்கேற்கவில்லை.

அப்போது, சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் பேசுகையில், இக்கூட்டத்துக்கு உயா் அலுவலா்கள் யாரும் வராத நிலையில், விவசாயிகளின் பிரச்னையை எப்படி மாவட்ட, மாநில நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் ஆகிய வட்டங்களிலுள்ள வேளாண் துறை உதவி இயக்குநா்கள், வேளாண் அலுவலா்கள் யாருமே பங்கேற்காமல் விவசாயிகளை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனா். அதிகாரிகள் எப்போது கலந்து கொள்கின்றனரோ, அப்போது நாங்களும் பங்கேற்கிறோம். எனவே, வேளாண் துறை அலுவலா்களைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றாா். இதையடுத்து, அனைத்து விவசாயிகளும் வெளிநடப்பு செய்தனா்.