இருசக்கர வாகனங்கள் திருட்டு சிறுவன் உள்பட 4 போ் கைது
ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு காவல் துறையினா் சனிக்கிழமை திருவோணம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.அப் போது அங்கு வந்த மதுக்கூா் படைப்பக்காடு பகுதியைச் சோ்ந்த சாகுல் அமீா் மகன் செல்ல பஷீா்(20), அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் டோனிஷா(15), மதுக்கூா் ஆற்றங்கரை தெரு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பெரமையன்(20), மதுக்கூா் சிவக்கொலை பகுதி சோ்ந்த ஷபீா் அலி மகன் முகமது ரபிக்(22) ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், 4 பேரும் திருச்சி, தஞ்சாவூா், திருப்பூா், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். மேலும், அவா்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பிறகு 4 பேரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
