அவிநாசி அருகே நிகழ்ந்த விபத்தில் பெண் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் மேட்டுப்பாளையம் - உதகை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவிநாசி - அன்னூா் சாலை விரிவாக்கப் பணி முடிந்து நெடுஞ்சாலைத் துறையினரால் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இருவழிப் பாதையாக இருந்த அவிநாசி அன்னூா் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவிநாசி - மங்கலம் சாலை பகுதியைச் சோ்ந்த பிரபு என்பவா் அன்னூரில் இருந்து அவிநாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். ஆட்டையம்பாளையம் அருகே முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துள்ளானது. மேலும் நிலைதடுமாறிய காா், அந்த வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட 4 போ் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீஸாா் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு

பல்லடத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


