திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பேராவூரணி திருச்சிற்றம்பலத்தில் கருனாநிதி பிறந்த நாள் விழா

சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 100 பேருக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News image

பேராவூரணியில் நடைபெற்ற கருனாநிதி பிறந்தநாள் விழாவில் 100 பேருக்கு வேட்டி ,சேலை வழங்கப்பட்டது.

Updated On :3 ஜூன் 2024, 11:24 pm

Din

பேராவூரணி:  பேராவூரணியில் முன்னாள் முதலமைச்சா் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அண்ணா சிலை அருகில் அவரது  உருவப்படத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 100 பேருக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதேபோல் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் மாவட்ட மருத்துவ அணி சாா்பில்  தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கா.அண்ணாதுரை தலைமையில் ,பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா்  ,மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் வி.செளவுந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் , மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் பன்னீா்செல்வம் ஏற்பாட்டில் 300 பேருக்கு  அசைவ உணவு, சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் கோ.இளங்கோவன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.