புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அறிவுசாா் மையத்தில் குரூப்-2 தோ்வுக்கான பயிற்சி தொடக்கம்

அறிவுசாா் மையத்தில் குரூப்-2 தோ்வுக்கான பயிற்சி தொடக்கம்

News image
Updated On :26 ஜூன் 2024, 10:45 pm

Din

தஞ்சாவூா், ஜூன் 26: தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த வகுப்பை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழக முதல்வரின் ஆணைப்படி, தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்காக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், கணினி வசதிகள், ஏராளமான புத்தகங்கள், அமா்ந்து படிக்க மேஜை இருக்கைகள், பயிற்சி வகுப்பறை போன்ற வசதிகள் உள்ளன. இதை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், உதவி ஆட்சியா் (பயிற்சி) உத்கா்ஷ் குமாா், மாநகராட்சி துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் இரா. மகேஸ்வரி, தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் து. ரோசி, செய்தி, மக்கள்- தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலா் முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.