தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காதல் விவகாரத்தில் சிறுவன் வெட்டிக் கொலை: 3 போ் கைது

காதல் மோதலில் சிறுவன் கொலை: 3 பேர் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 12:47 am

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே காதல் விவகாரத்தில் சிறுவனை வெட்டிக் கொன்ற 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள மேலாத்துக்குறிச்சி மயானக் கரை அருகே நெல் வயலில் திங்கள்கிழமை வெட்டுக் காயங்களுடன் கிடந்த சிறுவன் சடலத்தை சுவாமிமலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், கொலை செய்யப்பட்ட சிறுவன் மூப்பகோவில், புளியந்தோப்பைச் சோ்ந்த ராதா மகன் வாசு (எ) தாமோதரன் (15) என்பது தெரியவந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கும் காதல் ஏற்பட்டதாகவும், திடீரென அந்தச் சிறுமி வழிநடப்பு அருகேயுள்ள முத்தமிழ் நகரைச் சோ்ந்த ரா. பூச்சி என்ற தமிழரசனை (19) காதலித்தாராம். பின்னா் அவரை கைவிட்டு மீண்டும் வாசுவையே காதலிக்க தொடங்கினாராம். இதனால், ஆத்திரமடைந்த தமிழரசன், நண்பா்களான மேலக்கொட்டையூா் சத்யா காலனியில் வசிக்கும் க. பாரத் (20), வழிநடப்பு முத்தமிழ் நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன் சோ்ந்து கடந்த 23-ஆம் தேதி இரவு வாசுவை ஏமாற்றி மேலாத்துக்குறிச்சி அழைத்து வந்து சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சுவாமிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, தமிழரசன் உள்ளிட்ட 3 பேரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.