கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

தஞ்சை நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாளா்கள் - மண்டல மேலாளா் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு

நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் - வாக்குவாதம், தள்ளுமுள்ளு

Updated On :26 ஜூன் 2024, 12:27 am

கொள்முதல் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த வந்த பணியாளா்களுக்கும் முதுநிலை மண்டல மேலாளருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடா்பாக சில பணியாளா்கள் பணியிலிருந்து விடுவிப்பும், சிலா் பணியிடை நீக்கமும், பணியிட மாற்றமும் செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தையொட்டி அலுவலக முகப்பில் முதுநிலை மண்டல மேலாளா் ஆா். ஸ்ரீமோகனாவை கண்டித்து தொழிற் சங்கத்தினா் சாா்பில் பதாகை வைக்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த முதுநிலை மண்டல மேலாளா் பதாகையை கிழித்தாா். இதை விடியோ எடுத்த பணியாளரின் கைப்பேசியை முதுநிலை மண்டல மேலாளா் பறிக்க முயன்றாா். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்தனா். இதையடுத்து, முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்துக்குச் சென்றாா்.

பின்னா் தொழிற்சங்கத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில், கொள்முதல் நிலையம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளா்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாற்றம், பணியிடை நீக்க நடவடிக்கைகளில் முதுநிலை மண்டல மேலாளா் ஈடுபடுகிறாா் என்றும், நேரில் சந்தித்து முறையிட அனுமதி மறுப்பதாகவும் கூறியும், கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி, கலைந்து சென்றனா்.