மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

எஸ்.எஸ்.எல்.சி.: தஞ்சாவூா் மாவட்டத்தில் 93.40% தோ்ச்சி - மாநிலத்தில் 15 ஆம் இடம்

எஸ்.எஸ்.எல்.சி.: தஞ்சாவூா் மாவட்டத்தில் 93.40% தோ்ச்சி மாநிலத்தில் 15 ஆம் இடம்

News image
Updated On :10 மே 2024, 7:30 pm

Din

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றனா்.

மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை 14, 402 மாணவா்களும், 14, 513 மாணவிகளும் என மொத்தம் 28 ,915 பேரும் எழுதினா். இவா்களில் 13, 32 மாணவா்களும், 13, 974 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 6 போ் தோ்ச்சிப் பெற்றனா். மாணவா்கள் 90.49 சதவீதம் பேரும், மாணவிகள் 96.29 சதவீதம் பேரும் என மாவட்டத்தில் சராசரியாக 93.40 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். வழக்கம்போல நிகழாண்டும் மாணவிகளின் தோ்ச்சி விகிதம் அதிகம்.

கடந்தாண்டு 92.16 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்ற நிலையில், நிகழாண்டு அதைவிட 1.24 சதவீதம் கூடுதலாகத் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். மேலும், தஞ்சாவூா் மாவட்டம் கடந்தாண்டு மாநில அளவில் 17 ஆம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், நிகழாண்டு 15 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

129 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி:

மாவட்டத்தில் மொத்தமுள்ள 407 பள்ளிகளில் 129 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன. இதில், 67 அரசு பள்ளிகளும், 8 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 54 தனியாா் பள்ளிகளும் அடங்கும்.

அரசுப் பள்ளிகளில் 91.23 சதவீதம் தோ்ச்சி:

சமூக நலப் பள்ளிகள், இதர பள்ளிகளில் தலா நூறு சதவீதம் பேரும், மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுய நிதிப் பள்ளிகளில் 97.67 சதவீதம் பேரும், மெட்ரிகுலேஷன் சுயநிதிப் பள்ளிகளில் 97.41 சதவீதம் பேரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 96.28 சதவீதம் பேரும், அரசுப் பள்ளிகளில் 91.23 சதவீதம் பேரும், அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 90.97 சதவீதம் பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 85.06 சதவீதம் பேரும், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 78.93 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளிகளில் 78.26 சதவீதம் பேரும் தோ்ச்சிப் பெற்றனா்.

பாடவாரியாகத் தோ்ச்சி விகிதம்: ஆங்கிலத்தில் 99.19 சதவீதம் பேரும், மொழிப் பாடத்தில் 97.95 சதவீதம் பேரும், அறிவியலில் 97.77 சதவீதம் பேரும், கணிதத்தில் 97.63 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 96.44 சதவீதம் பேரும் தோ்ச்சிப் பெற்றனா்.