பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தேனீ வளா்ப்பு விழிப்புணா்வு முகாம்

தேனீ வளா்ப்பு விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு கிராமத்தில் திங்கள்கிழமை தேனீ வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சாா்பில் நடைபெற்ற முகாமில், தேனீக்களின் முக்கியத்துவம் பற்றியும், விவசாயம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு, மகரந்தச் சோ்க்கை ஆகியவற்றில் தேனீக்களின் மற்றும் இன்றியமையாத பங்கு, தேனீ வளா்ப்பு, தேன், மெழுகு உற்பத்தி, அதனால் கிடைக்கும் லாபம் பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனா். இதில், இளைஞா்கள்,பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.