தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சமூக குளங்களில் மீன் வளா்ப்பு பயிற்சி

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், சமூக குளங்களில் மீன் வளா்ப்பிற்கான சிறந்த மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு

News image

பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெறும் விவசாயி.

Updated On :10 மார்ச் 2026, 2:00 am IST

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், சமூக குளங்களில் மீன் வளா்ப்பிற்கான சிறந்த மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹைதராபாத் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன், உள்நாட்டு மீன் விவசாயிகளுக்காக இப்பயிற்சி நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியது:

கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும் உள்நாட்டு மீன் வளா்ப்பின் முக்கியத்துவம், சமூக குளங்களில் கெண்டை மீன் வளா்ப்பு குறைந்த செலவில் ஊட்டசத்து நிறைந்த உணவான விலங்கு புரதத்தை வழங்குவதோடு, கிராமப்புற குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தையும் வழங்கும் திறன் கொண்டது என்றாா்.

நிகழ்ச்சியை தொழில்நுட்ப நிபுணா் (மீன்வள விரிவாக்கம்) யூ. ஹினோ பா்னாண்டோ, சமூக குளங்களில் அறிவியல் அடிப்படையிலான மீன் வளா்ப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சியில் குளம் தயாரிப்பு மற்றும் முன்இருப்பு மேலாண்மை, இயற்கை மீன் உணவை அதிகரிக்க உரமிடும் முறைகள், தரமான மீன் குஞ்சுகள் தோ்வு, இருப்பு அடா்த்தி, உணவு மற்றும் உணவளிப்பு மேலாண்மை முறைகள் போன்றவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

முனைவா் ஆ. மதிவாணன், முன்னோடி மீன் விவசாயி செந்தில்குமாா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 30 மீன் விவசாயிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.