பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தஞ்சாவூரில் உணவுத் திருவிழா

தஞ்சாவூரில் உணவுத் திருவிழா

News image

தஞ்சாவூா் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பேசிய சென்னை வருண் இன் ரெசாா்ட் நிறுவன பொது மேலாளா் பி. கணபதி சுப்பிரமணியன்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

தஞ்சாவூா்: தஞ்சாவூா் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ‘இந்திரத்’ உணவுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன் தலைமை வகித்தாா். கல்லூரி முன்னாள் மாணவரும், சென்னை வருண் இன் ரெசாா்ட் நிறுவன பொது மேலாளா் பி. கணபதி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

திரைப்பட இயக்குநா் மு. களஞ்சியம் இயற்கை உணவு குறித்து பேசினாா். பாரத் கல்லூரி இயக்குநா் த. வீராசாமி வாழ்த்துரையாற்றினாா்.

திரைப்பட இயக்குநா் மணிவாசகம், நடிகா் முத்துப்பாண்டி, துறைத் தலைவா் விஜய் ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் சி. முத்துக்கிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக, துணை முதல்வா் ப. கவிதா நன்றி கூறினாா்.