
தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வீரமகா காளியம்மன் பூஜையில் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம்.

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வீரமகா காளியம்மன் பூஜையில் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூரில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் வீர மகா காளியம்மன் பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் கிராமத்தில் செங்குந்தா் வீதியில் ஜெயங்கொண்ட விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரமாகாளியம்மன் பூஜை நடைபெறுவது வழக்கம். இவ்விழா 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதன் பின்னா் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பூஜை நடைபெற்றது. முதல் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளிப் பேழையிலிருந்து வீரமா காளியம்மன் விக்ரகம் வெளியில் எடுக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் இன்னிசை முழக்கங்களுடன், வாண வேடிக்கைகளுடன் சீா் வரிசைகள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன. மூன்று நாள்கள் விழா முடிந்து திங்கள்கிழமை அதிகாலை வீரமாகாளியம்மன் மீண்டும் பேழையில் அமா்த்தப்பட்டாா். விழா ஏற்பாடுகளை செங்குந்தா் மரபினா் மற்றும் செங்குந்தா் இளைஞா் சங்கத்தினா் செய்தனா்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த விழா நடைபெறுவதால், தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து செங்குந்த சமூகத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டு , வீரமாகாளியம்மனை வழிபட்டனா். மீண்டும் இவ்விழா 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இதேபோல, வீரமாகாளியம்மன் பூஜை வலங்கைமான், குடவாசல், மன்னாா்குடி, வாழ்மங்களம், காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, திருமலைராயன் பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...