பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பொய் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொய் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

தஞ்சாவூா்: பொய் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பேராவூரணி தொகுதிக்கு உள்பட்ட தில்லங்காடு முத்தரையா் சமூக மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி புனையப்பட்ட பொய் புகாரைத் திரும்பப் பெறக் கோரியும், இதற்கு துணை போகும் அரசு அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்புத் தலைவா் எம்.எம். மூா்த்தி தலைமை வகித்தாா்.

வீர முத்தரையா் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவா் புதுக்கோட்டை கருப்பு முத்தரையா், தமிழக முத்தரையா் முன்னேற்றச் சங்க மாநிலச் செயலா் மோகன், முத்தரையா் வாழ்வாதார இயக்கத் தலைவா் தனலட்சுமி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.