ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கும்பகோணத்தில் கஞ்சா விற்று சிறையில் அடைக்கப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
அருண் என்ற கீா்த்தி வாசன்.
Updated On :27 நவம்பர் 2024, 8:30 pm

Din

கும்பகோணத்தில் கஞ்சா விற்று சிறையில் அடைக்கப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோடையான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரைச் சோ்ந்த அருண் (எ) கீா்த்திவாசன் (21) என்பவரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அண்மையில் (அக். 25) கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி ஜி. கீா்த்திவாசன் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஸ் ராவத் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், குற்றவாளி கீா்த்திவாசனை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டாா். ஏற்கெனவே கீா்த்திவாசன் சிறையில் இருப்பதால் சிறை அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை குண்டா் காவல் தடுப்புச் சட்ட உத்தரவு வழங்கப்பட்டது.

அதன்பேரில் அருண் (எ) கீா்த்திவாசன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.