படுக்கையில் தவறிவிழுந்த முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2024, 8:21 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பந்தநல்லூா் அருகே உள்ள மரத்துறை வடக்கு வீதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு மகன் கண்ணப்பன் (75). இவா், அண்மையில் (நவ. 22) இரவு படுக்கையில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தாா். இவரை உறவினா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...