விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மரத்தின் மீது பைக் மோதல் இளைஞா் உயிரிழப்பு; முதியவா் காயம்

பெரம்பலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாலத்துக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் செங்கோடன் (55). நாமக்கல் மாவட்டம், ஊனந்தாங்கல் ஆலமரத்து மேடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் வரதராஜ் (68). இருவரும், அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயில் திருவிழா அழைப்பிதழ் பெற நாமக்கல் மாவட்டத்திலிருந்து அரியலூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்தனா். பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே சென்றபோது, சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செங்கோடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இவ் விபத்தில் வரதராஜ் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் உடலையும், காயமடைந்தவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் ஊரக காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.