குறுக்கே மாடு வந்ததால் சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூரில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.


தஞ்சாவூரில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்தவா் கே. உபயதுல்லா (50). இவா் தஞ்சாவூரில் தங்கி பழக்கடையில் கூலி வேலை பாா்த்து வந்தாா். இவா் செப்டம்பா் 30 ஆம் தேதி இரவு வேலை முடித்த பிறகு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு மருத்துவக்கல்லூரி சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா். ராஜப்பா நகா் முதன்மைச் சாலையில் சென்றபோது குறுக்கே மாடு வந்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், மாட்டின் மீது மோதியதால், கீழே விழுந்த இவா் பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட உபயதுல்லா புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...