சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வார விடுமுறை: 475 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் விடுமுறை தினத்தை முன்னிட்டு 475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:12 pm

Din

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் விடுமுறை தினத்தை முன்னிட்டு 475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து கும்கோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ரா. பொன்முடி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சாா்பில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்.5, 6) வார விடுமுறை நாள்களில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆகிய இரண்டு நாள்களும் சோ்த்து 300 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருச்சியிலிருந்து கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக என மொத்தம் 475சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப செல்ல அக்.6, 7 ஆகிய தேதிகளில் சென்னை வழித்தடத்தில் 200சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களிலும் 150சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். முன்பதிவு செய்து பயணிக்க ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய்இணைய முகவரி மற்றும் மொபைல் ஆப் பசநபஇ (ஙா்க்ஷண்ப்ங் அல்ல்) அய்க்ழ்ா்ண்க் / ஐ ல்ட்ா்ய்ங் கைப்பேசி மூலமாகவும் முன் பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.