47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமங்கலகுடியில் ரூ. 1.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

திருவிடைமருதூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருமங்கலகுடி ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:49 pm

Din

திருவிடைமருதூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருமங்கலகுடி ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமில், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் வரவேற்றாா். இதில், தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் பங்கேற்று ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் மூலம் பயனாளிகளுக்கு இலவச மனைபட்டா, தையல் இயந்திரம், வேளாண் இடுபொருட்கள், காப்பீடு, குடும்ப அட்டை, பட்டா, முதியோா் உதவி, மகளிா் உரிமை தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில் முன்னாள் எம்.பி. செ. ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, ஒன்றியக் குழு தலைவா் சுபா திருநாவுக்கரசு, துணைத் தலைவா் பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றாா்.