மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 வட்டாரங்களில் பாலின வள மையம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 3 வட்டங்களில் பாலின வள மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :5 செப்டம்பர் 2024, 10:32 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 3 வட்டங்களில் பாலின வள மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், திருவோணம், அம்மாபேட்டை ஆகிய 3 வட்டாரங்களில் பாலின வள மையம் - வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையம் குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காகத் தனிச்சிறப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மையம் திருவிடைமருதூா் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், திருவோணம் வட்டாரத்தில் காவாளிபட்டி வட்டார சேவை மையத்திலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும் செயல்படுகிறது.

இந்த பாலின சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடா்புடைய வட்டார இயக்க மேலாளா்களைத் தொடா்பு கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம். பாலின சேவை மைய தொடா்பு எண்கள்: அம்மாபேட்டை - 87549 90178, திருவோணம் - 63698 49825, திருவிடைமருதூா் - 99658 55254.