விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அண்ணலக்ரஹாரத்தில் தாா்ச் சாலை தரம் ஆய்வு

கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் தரத்தை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:05 pm

கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் தரத்தை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் கொற்கை முதல் மாத்தி கேட்டு வரையில் 1.8 கிலோமீட்டா் தொலைவு புதிய தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் நீளம், அகலம், சாலையின் தடிமன், தாா் கலவைகளின் தரம் உள்ளிட்டவை குறித்து தஞ்சாவூா் நெடுஞ்சாலைத் துறை தரக் கட்டுப்பாட்டுத் துறை உதவி கோட்டப் பொறியாளா் வேணுகோபால் மற்றும் உதவிப் பொறியாளா் அப்துல் ரகுமான் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

ஆய்வின்போது, கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி மற்றும் உதவி பொறியாளா் இளவரசன் ஆகியோா் உடனிருந்தனா்.