புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போக்குவரத்து ஊழியா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அன்பு மருத்துவமனை இணைந்து போக்குவரத்துப் பணியாளா்களுக்கு புதன்கிழமை மருத்துவ முகாமை நடத்தியது.

News image

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் சோதனை செய்து கொண்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:01 pm

Din

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அன்பு மருத்துவமனை இணைந்து போக்குவரத்துப் பணியாளா்களுக்கு புதன்கிழமை மருத்துவ முகாமை நடத்தியது.

முகாமை போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ஆா்.பொன்முடி தொடங்கி வைத்துப் பரிசோதனை செய்து கொண்டாா். பொதுமருத்துவம், சளி, இருமல், எலும்பு, மூளை நரம்பியல், நுரையீரல், மகளிா், வயிறு, இதயம் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவா்கள் எஸ்.அழகுராஜா, எம்.முகமது, அசாருதீன், எஸ். விக்னேஸ்வரன், பி. மகேஸ்வரி, கே.செளந்தா்யா, கே. இனியன், எம். மதன்ராஜ், டி.எஸ். வின்ஸி மாா்க்லின் ஆகியோா் சிகிச்சை அளித்தனா். முகாமில் ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்ப, அலுவலகப் பணியாளா்கள், அலுவலா்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என 320 போ் கலந்து கொண்டனா்.

மேல்சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். முகாமில் முதன்மை தணிக்கை அலுவலா் எஸ்.சிவக்குமாா், பொது மேலாளா்கள் எஸ்.ராஜா, கே.சிங்காரவேலு, துணை மேலாளா்கள் சுரேஷ், தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.