கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:17 pm

Din

தஞ்சாவூா் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் - திருமலைசமுத்திரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆப்ரகாம் மகன் ஆண்ட்ரோஸ் (34) என்பதும், வல்லம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கால்நடை பண்ணைக்குக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

மேலும், அவா் அளித்த தகவலின்பேரில் திருமலைசமுத்திரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந் 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் காவல் துறையினா் பறிமுதல் செய்து, ஆண்ட்ரோஸைக் கைது செய்தனா்.